சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது வழக்கு பதிவு

சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-11-02 16:52 GMT
பேரையூர், 
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). இவரும் 15 வயது சிறுமியும் பழகி வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். இதனால் பிரகாசின் பெற்றோரும், சிறுமியின் பெற்றோரும், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பம் ஆன நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த விவரம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலராகப் பணிபுரியும் கருப்பாயிக்கு தெரியவந்தது. அவர் சிறுமியிடம் விசாரணை செய்து பின்னர் டி.கல்லுப் பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரகாஷ், மற்றும் பிரகாசின் பெற்றோர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் மீது குழந்தை திருமணம் செய்து வைத்தல், மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்