தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-
செடிகள், கொடிகள் படர்ந்த மின்கம்பம்
சீர்காழி நகராட்சி திட்டை ஊராட்சி கற்பகம் நகர் ஆறுமுக வெளி ரோடு அருகே சாலையோரம் இருக்கும் மின்கம்பம் செடி கொடிகள் படர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது.மேலும் மழை காலங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் புகையோடு கூடிய சத்தம் கேட்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கற்பக நகர், சீர்காழி.
சாலையில் தேங்கும் மழைநீர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில்வே தொப்பு தெருவில் உள்ள சாலையில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிபடுகின்றனர். இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், குத்தாலம்.