பகண்டை கூட்டுரோடு அருகே துணிகரம் கடையில் இருந்த பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்சவேல். இவருடைய மனைவி விருத்தாம்பாள் (வயது 65). இவர் அதேஊரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் விருத்தாம்பாள் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்மநபர்கள் 2 பேர், கடையில் பொருட்கள் வாங்க வந்ததுபோல் நடித்து, விருத்தாம்பாள் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கடையில் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் மர்மநபர்கள் 2 பேர், நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.