போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம்

நாகையில் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2021-11-02 16:36 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம் அடைந்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு
நாகை அருகே மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஞானமூர்த்தி  மகன் ஹரிஹரசுதன் (வயது 22). நாகையில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் சிக்கல் பகுதியை சேர்ந்த சந்தியா (19) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். 
இதனிடையே சந்தியாவின் குடும்பத்தினர், அவரை காணவில்லை என கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
இந்த நிலையில் நேற்று ஹரிஹரசுதன், சந்தியா ஆகிய 2 பேரும் நாகை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர்கள், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 நாகையில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்