திருவேங்கடம் அருகே லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

திருவேங்கடம் அருகே லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-11-02 16:07 GMT
திருவேங்கடம்:
குருவிகுளம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 47). லாரி டிரைவர். இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அய்யப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு, மாவட்ட கலெக்டரிடம், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு ஜாகிர் உசேன் ஆகியோர் பரிந்துரைத்தனர். இதனை ஏற்று அய்யப்பனை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, குண்டர் தடுப்பு சட்டத்தில் அய்யப்பனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்