சிவகிரியில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சிவகிரியில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-02 15:12 GMT
சிவகிரி:

சிவகிரியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

லாரி டிரைவர்

சிவகிரி சிவராமலிங்காபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜூ (வயது 40). லாரி டிரைவர். இவருடைய மனைவி நாகலட்சுமி (35). இவர்களுக்கு மகேஷ்குமார் (11) என்ற மகனும், மதுபிரியா (10) என்ற மகளும் உள்ளனர். இருவரும் சிவகிரி அருகே ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
ராமராஜூ 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை வீட்டிற்கு வருவார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தற்கொலை


இந்த நிலையில் கடந்த 2 மாத காலமாக ராமராஜூ வேலைக்கு செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து வந்ததால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நாகலட்சுமி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் சம்பவ இடத்திற்கு சென்றார். நாகலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்