கோத்தகிரி சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
கோத்தகிரி சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
கோத்தகிரி
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் சிவன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி லிங்கேஸ்வருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதன்படி, சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெற்றது.
மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
---