திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2.78 கோடி வருமானம் கிடைத்துள்ளது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது

Update: 2021-11-02 14:20 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் கடந்த ஆகஸ்ட் மாதம் எண்ணப்பட்டது. அதன் பிறகு கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமையில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், உதவி ஆணையர்கள் ரோஜாலி, வெங்கடேஷ், ஆய்வர்கள் முருகன், இசக்கிசெல்வம், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரத்து 160 கிடைத்துள்ளது.
அதேபோல், தங்கம் 2620 கிராம், வெள்ளி 20,350 கிராமம், 231 வெளிநாட்டு நோட்டுகளும் கிடைத்தது.

மேலும் செய்திகள்