தூத்துக்குடி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்

தூத்துக்குடி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்

Update: 2021-11-02 12:44 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் கிராமம் தேவர் தெருவை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 27). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு போடம்மாள்புரம் ரோட்டில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி ரோட்டோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விசுவநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்