தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் வாகனத்தில் சட்ட விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது, இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீதிபதிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் வாகனத்தில் சட்ட விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது, இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீதிபதிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

Update: 2021-11-02 10:09 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் வாகனத்தில் சட்ட விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீதிபதிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பிரசார வாகனம்
நாட்டின் 75- வது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 25-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கும் இலவச சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் தொடக்க நிகழ்ச்சி நேற்று கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ஹேமா, குடும்பநல நீதிபதி சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி செல்வக்குமார், சார்பு நீதிபதி, மாரீசுவரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராஜகுமரேசன் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பீரித்தா செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்