சென்னையில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-02 04:01 GMT
ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய இளைஞர் பெருமன்ற தேசிய தலைவர் திருமலை, த.மு.மு.க. துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்