நாமக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் வேளாண்மை அதிகாரி பலி?
நாமக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் வேளாண்மை அதிகாரி பலி?;
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வடுகம் கைலாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசுமதி (வயது 53). இவர் நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வசுமதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=====
======