மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
மணல் திருட்டில்ஈடுபட்ட 3 பேரை போலீசார கைது செயதனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது வீரப்பன் காலனி அருகே உள்ள ஓடையில் லோடு ஆட்டோவில் பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த செல்வின்ராஜா (வயது 27), நாராயணன் (31), கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த முருகன் (49) ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனே போலீசார், 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ¼ யூனிட் மணல் மற்றும் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.