பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

Update: 2021-11-01 19:37 GMT
சோமரசம்பேட்டை, நவ.2-
திருச்சி காஜாமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்-சந்திராஆரோக்கியமேரி தம்பதியின் மகன் ஹரிஹரன். இவர்சோமரசம்பேட்டை அருகே  இனியானூரில் உள்ள தாத்தா மருதமுத்து வீட்டில் தங்கி  புங்கனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
 இந்நிலையில் நேற்று ஹரிஹரன் தாய்க்கு போன் செய்து மனது சரியில்லை, அதனால் பள்ளிக்கு செல்லவில்லை என கூறியுள்ளார். இதை அவருடைய தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஹரிஹரன் தாத்தா வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்