நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் தமிழ்நாடு கொடி ஏற்றியதால் பரபரப்பு
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் தமிழ்நாடு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் ஓதியத்தூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ஜெயராஜ் மகன் டோமிக்ராஜா (வயது 24) தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு கொடியை திடீரென ஏற்றினர். இதுபற்றி தகவலறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தமிழ்நாடு கொடியை இறக்கினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவி கொடுத்த புகாரின் பேரில் டோமினிக் ராஜா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.