தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.;
நெல்லை:
வண்டி எண் 06037 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06038 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரெயில் வருகிற 5-ந் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு 6-ந் தேதி அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மாம்பலம் ரெயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் அரியலூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
வண்டி எண் 06040 நெல்லை - தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் வருகிற 7-ந் தேதி நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக 8-ந் தேதி காலை 7.55 மணிக்கு தாம்பரம் போய் சேரும். இந்த ரெயில் அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வண்டி எண் 06049 தாம்பரம் - நெல்லை சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்தில் இருந்து வருகிற 8-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு 9-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நெல்லை வந்து சேரும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.