மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.

Update: 2021-11-01 19:14 GMT
நொய்யல்,
கரூர் வையாபுரி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 59). இவர் தனது காரில் வேலாயுதம்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூலிமங்கலம் பிரிவு அருகே வந்தபோது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கரூர் வி.ஓ.சி. தெருவை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் ராமமூர்த்தி ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார். ராமமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்