விவசாயியிடம் பணம் பறிப்பு
விவசாயியிடம் பணம் பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராமையா மகன் பூல்பாண்டியன் (வயது 37). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது நண்பரை பார்ப்பதற்காக கீழக்கருவேலங்குளம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கீழதேவநல்லூரை சேர்ந்த வானுமாமலை மகன் அருண் உலகநாதன் பூல்பாண்டியிடம் தீபாவளி செலவுக்கு பணம் தரும்படி கேட்டார். அதற்கு அவர் மறுத்ததால் அருண் உலகநாதன் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த வேல்கம்பை காட்டி மிரட்டி, அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.170-ஐ பறித்து கொண்டு தப்பி விட்டார். இதுபற்றி களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து அருண் உலகநாதனை தேடி வருகிறார்.