மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-01 18:56 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மதுராம்பட்டு கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. 

அதை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சீரமைக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் நெல் நடவு செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது  பழுதடைந்து உள்ள டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்