தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று வெளியிட்டார். இதில் 5 சட்ட மன்ற தொகுதிகளில் 12,62,446 வாக்காளர்கள் உள்ளனர்.;

Update:2021-11-01 23:15 IST
தர்மபுரி:
வரைவு வாக்காளர் பட்டியல்
தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2022-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். இதன்படி தர்மபுரி மாவட்ட மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:- 
12,62,446 வாக்காளர்கள்
பாலக்கோடு- ஆண்கள்- 1,19,435, பெண்கள்- 1,16,972, இதரர்- 18. மொத்த வாக்காளர்கள்- 23,6,425. பென்னாகரம்- ஆண்கள்-1,26,852, பெண்கள்- 1,18,461, இதரர்- 10, மொத்த வாக்காளர்கள்- 2,45,323. தர்மபுரி- ஆண்கள்-1,35,110, பெண்கள்- 1,32,998, இதரர்- 112, மொத்த வாக்காளர்கள்- 2,68,220 வாக்காளர்கள் உள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி- ஆண்கள்- 1,31,888, பெண்கள்- 1,31,665, இதரர்- 11, மொத்த வாக்காளர்கள்- 2,63,564. அரூர் (தனி) ஆண்கள்- 1,24,539, பெண்கள்- 1,24,354, இதரர்- 21, மொத்த வாக்காளர்கள்- 2,48,914 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்- 6,37,824 பேரும், பெண் வாக்காளர்கள் 6,24,450, இதரர் வாக்காளர்கள் எண்ணிக்கை- 172, மொத்தம் 12,62,446 வாக்காளர்களின் உள்ளனர்.
சரிபார்த்து கொள்ளலாம்
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 860 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 30-ந்தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பதிவுகளை நேரில் பார்வையிட்டு சரிபார்த்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தற்போது தொடங்கி வருகிற டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை நடைபெறும்.
1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்காதவர்கள், தங்கள் பெயரை சேர்க்க படிவம் 6-ல் விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர் இடம ்பெயர்ந்திருந்தாலும், இறந்திருந்தாலும் படிவம் எண் 7-லும், பதிவில் திருத்தம் செய்ய படிவம் எண்-8-லும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ-விலும் விண்ணப்பிக்கலாம். வருகிற 13,14,27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும், www.nvsp.in/voter Helpline mobile app மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.

மேலும் செய்திகள்