ஊட்டி மலை ரெயில் 15 தேதி வரை ரத்து

ஊட்டி மலை ரெயில் 15 தேதி வரை ரத்து

Update: 2021-11-01 17:16 GMT
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்தது. 

இதனால் கடந்த 22-ந் தேதி கல்லாறு -அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே மலை ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன.


இதையடுத்து அந்த பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. ஆனால் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முடியாததால் கடந்த 23-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது  

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. 

அதை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்