தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்;
கோவை
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு சமூக நீதி பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதாக ஒரு ஐயம் உள்ளது.
இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய தமிழக முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இடஒதுக்கீடு அரசாணைக்கு தடையால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக வேல்முருகன் எம்.எல்.ஏ. பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.