66 பேருக்கு கொரோனா

66 பேருக்கு கொரோனா

Update: 2021-11-01 16:11 GMT
திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 473ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 59 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 742ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 750 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 2 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலிஎண்ணிக்கை 981ஆக உயர்ந்துள்ளது.  

மேலும் செய்திகள்