விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி ஆசிரியையிடம் பணமோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி ஆசிரியையிடம் பணமோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2021-11-01 15:52 GMT
நெல்லை:
விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் சாந்தி. பள்ளி ஆசிரியை. இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிய மர்மநபர், தான் வங்கி மேலாளர் பேசுகிறேன் என்று கூறி வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்களை கேட்டு பெற்றுக்கொண்டாராம். அதன்பின்னர் சாந்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சாந்தி நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் மர்மநபரை தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்