வளளியூரில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

வளளியூரில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-01 15:46 GMT
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருன்ராஜா, ஆல்வின் மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வள்ளியூர் பூங்காநகர் பகுதியில் சாக்குப்பையுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டு ஓடினார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை பிடித்து சாக்குப்பையை சோதனையிட்டபோது அதில் 5 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், வள்ளியூர் பூங்காநகரை சேர்ந்த தங்கபாண்டி (வயது 45) எனவும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டார். தங்கபாண்டியை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் மது விற்றதன் மூலம் கிடைத்த 150 ரூபாயையும் பறிமுதல் செய்தனர். 
 இதேபோன்று வள்ளியூர் ெரயில்வே கேட் அருகே மதுப்பாட்டில்கள் விற்பனை செய்ததாக சமூகரெங்கபுரம் அருகேயுள்ள துரைகுடியிருப்பை சேர்ந்த தவசு (70) என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 18 மது பாட்டில்களையும், 200 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்