7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்

7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் விசாகன் வெளியிட்டார்.;

Update: 2021-11-01 15:41 GMT
திண்டுக்கல்: 

வரைவு வாக்காளர் பட்டியல்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி உள்பட 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 
இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 9 லட்சத்து 14 ஆயிரத்து 328 ஆண் வாக்காளர்கள், 9 லட்சத்து 63 ஆயிரத்து 349 பெண் வாக்காளர்கள், 197 இதரர்கள் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 874 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

சிறப்பு முகாம்
இந்த பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், இடமாற்றம் செய்தல் உள்ளிட்டவைக்காக விண்ணப்பிக்க அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள உதவி வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்புகொள்ளலாம்.
 மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். இதுதவிர வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்த முகாம் வருகிற 13, 14, 27, 28-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்