விவசாய தொழில் நுட்ப ஆராய்ச்சியை மேலும் அதிகப்படுத்த வேண்டும்

தொழில் நுட்ப ஆராய்ச்சியை மேலும் அதிகப்படுத்த வேண்டும்

Update: 2021-11-01 15:05 GMT
கோவை

விவசாய தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

பட்டமளிப்பு விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 42 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. 

இதில், தமிழக கவர்னர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு முடித்த 2602 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.


இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளை உருவாக்கிய இந்த நூற்றாண்டு பழமையான பல்கலைக்கழகத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

காலனி ஆதிக்கத்திற்கு பிறகு தான் நம் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. பிறகு பசுமை புரட்சியின் மூலமாக விவசாய வளங்கள் மீட்டெடுக்கப்பட்டது. 

பசுமை புரட்சியை முன்னெடுத்த ஆராய்ச்சியா ளர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உணவு உற்பத்தி

இப்போது நாம் மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். 

இந்தியாவில் அதிக அளவு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்னும் மேம்படவில்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு விவசாய வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். 

ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் நேரடியாக பலன் பெற்று வருகின்றனர். 

மண் பரிசோதனை அட்டை மூலம் விவசாயிகள் பெருமளவு பயன் அடைந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் உணவு உற்பத்தி, தேவைக்கு அதிகமாகவே உள்ளது.

நவீன தொழில்நுட்பம்

விவசாய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சியை மேலும் அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வேளாண் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. 

அந்தந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பங்களை  அறிமுகப்படுத்துகின்றன.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் இதுவரை 30,230 பேர் இளங்கலை பட்டமும், 11,397 பேர் முதுகலை பட்டமும், 3,504 பேர் ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளனர். 

இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர். அவர்க ளை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் பிரச்சினை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொழில்நுட்ப ரீதியாக அணுகி அவற்றை சரி செய்ய வேண்டும். 

இதில் மாநில அரசின் பங்கு முக்கி யமானது. மாநில அரசு இப்பல்கலைக்கழகத்தை மதிப்புமிக்க கல்வி நிறுவனமாக கருதி முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 


பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. 

பல்கலைகழகத்தின் பயிர் வகைகள், மேலாண் மை தொழில்நுட்பங்கள் மற்றும் பண்ணை எந்திரங்களை தமிழ்நாடு விவசாய சமூகம் ஏற்றுக்கொண்டதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,433 கோடி வருமானம் அதிகரித்து வருகிறது. 

இவற்றை தொழில் துறையினருடன் இணைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாராட்டு

வேளாண் கல்வியை பொருத்தவரை தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. விவசாயி களை பாதிக்கக் கூடிய இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அளவிற் கான நவீன யுத்திகளை நாம் பயன்படுத்த வேண்டும். 

இதன் அடிப் படையில் பிரதமர் பல்வேறு வேளாண் திட்டங்களை அறிவித்து உள்ளதோடு பல்வேறு புதிய பயிர் வகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

இங்கு பட்டம் பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 

இந்தியாவின் தலைசிறந்த 5 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் விரைவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இடம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்