தூத்துக்குடி மாவட்டத்துக்கு விவசாய தேவைக்காக 800 டன் யூரியா உரம் வந்தது
தூத்துக்குடி மாவட்டத்துக்கு விவசாய தேவைக்காக 800 டன் யூரியா உரம் வந்தது;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்துக்கு விவசாய தேவைக்காக 800 டன் யூரியா உரம் வந்தது.
இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சாகுபடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பொழிந்து வரும் நிலையில் கயத்தார், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், தூத்துக்குடி, கருங்குளம் ஆகிய வட்டாரங்களில் மானாவாரி பயிர்களான மக்காசோளம், கம்பு, பயறு வகை பயிர்கள், பருத்தி, சோளம் போன்ற பயிர்களின் விதைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் உரத்தேவையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 800 டன் உரம் ஒதுக்கீடு பெறப்பட்டது. அந்த உரம் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலம் நெல்லை ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு சங்கம்
அதன்படி மானாவாரி பகுதி கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 162 டன் யூரியாவும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 638 டன் யூரியாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று ஸ்பிக் நிறுவன யூரியா 100 டன் மானாவாரி பகுதி உரக்கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. நாளை (புதன்கிழமை) மேலும் 100 டன் யூரியா ஸ்பிக் நிறுவனத்தால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.