கூடலூர்
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியை சேர்ந்தவர் சிவதாஸ்(வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் ஆட்டோவில் சென்றார். அப்போது திடீரென ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சிவதாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.