நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலியானார்
நாசரேத் அருகே மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலியானார்
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள மறவன்குறிப்பன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 46). இவர் நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் உடையார்குளம் அருகே உள்ள சோலார் மின்உற்பத்தி நிலையத்தின் எதிரே அமைந்திருக்கும் டிரான்ஸ்பார்மரில் லைன் மாற்றுவதற்காக சென்றார். அங்கு லைன் மாற்றியபோது, அவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தியே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மின்ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த ராஜனுக்கு தீபா என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளன