கம்பமெட்டு மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

கம்பமெட்டு மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-11-01 11:00 GMT
கம்பம் :
கம்பம் யாதவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 56). இவர் தனக்கு சொந்தமான லாரி மூலம் கால்நடை தீவனங்களை கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி அவர் நேற்று காலை கம்பத்தில் இருந்து கால்நடை தீவனங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். லாரியை தாத்தப்பன் குளத்தை சேர்ந்த சரவணன் (30) என்பவர் ஓட்டினார். வழியில் மலைப்பாதையில் 4-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்