கஞ்சா விற்ற 3 பேர் கைது

மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.

Update: 2021-11-01 06:35 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டார் சைக்கிள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அய்யனார் கோவில் பகுதியில் வந்தபோது அவர்களை மடக்கி சோதனை செய்ததில் அவர்கள் அரை கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மதுராந்தகம் அடுத்த செங்குந்தர் பேட்டையை சேர்ந்த 18 வயதானவர், வன்னியர் பேட்டையை சேர்ந்த ராஜேஷ்(19), சூரக்கோட்டையை சேர்ந்த மணி(19) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்