கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலி

கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால், லாரியில் இடதுபக்கம் அமர்ந்து இருந்த கிளீனர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-11-01 04:59 GMT
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மதுபாலன் (வயது 23). லாரி கிளீனர். இவர், டிரைவர் கருப்பையாவுடன் மணலி புதுநகருக்கு கன்டெய்னர் லாரியில் வந்தபோது, டீசல் தீர்ந்து போனதால் மற்றொரு கன்டெய்னர் லாரியில் ‘லிப்ட்’ கேட்டு நாப்பாளையத்தில் டீசல் வாங்க சென்றார். அந்த லாரி, விச்சூர் சாலை, சுப்ரமணியம் நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பக்கவாட்டில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் லாரியின் கன்டெய்னர் பெட்டி உரசியது.

 இதில் கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால், லாரியில் இடதுபக்கம் அமர்ந்து இருந்த கிளீனர் மதுபாலன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி புதுநகர் போலீசார், பலியான கிளீனர் மதுபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்