அனுமதி இன்றி திறக்கப்பட்ட பட்டாசு கடையை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு
பெட்ரோல் நிலையம் மற்றும் சமையல் கியாஸ் கிடங்கு அருகில் அனுமதி இன்றி திறக்கப்பட்ட பட்டாசு கடையை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டை மேடவாக்கம் சாலையில் பெட்ரோல் நிலையம் மற்றும் சமையல் கியாஸ் கிடங்கு அருகில் பெரிய அளவில் பட்டாசு கடை திறக்கப்பட்டு உள்ளதாகவும், உரிய அனுமதி இன்றி திறக்கப்பட்ட பட்டாசு கடையை மூடவேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலர் சீனிவாசனுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அலுவலர் யுகமணி தலைமையில் அதிகாரிகள் போலீசாருடன் சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது பட்டாசு கடையை வைக்க தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் திறக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். உரிய அனுமதி இல்லாமல் கடையை திறக்ககூடாது என்று கூறி உடனடியாக பட்டாசு கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பட்டாசு கடை மூடப்பட்டது.