விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ், நகைகள்-10 பேருக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ், நகைகளை 10 பேருக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்;

Update: 2021-10-31 22:29 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், முதல்-அமைச்சர் அறிவித்த கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.9 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாக இயக்குனர் ப.பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் சேலம் வடக்கு வக்கீல் ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு ஆர்.அருள், மேட்டூர் எஸ்.சதாசிவம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்