சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 59 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 58 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 18 பேர் பாதிக்கப்பட்டனர். கொங்கணாபுரம், நங்கவள்ளி, வீரபாண்டி, கெங்கவல்லி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், எடப்பாடி, மேச்சேரி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம் மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், தாரமங்கலம், ஆத்தூரில் தலா 4 பேர் பாதிக்கப்பட்டனர்.
தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 15 பேர் உள்பட மாவட்டத்தில் மொத்ததம் 58 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 889 பேர் பாதிக்கப்பட்டனர். 97 ஆயிரத்து 619 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று ஒருவர் பலியானார். இது வரை கொரோனா பாதிப்பால் மாவட்டத்தில் ஆயிரத்து 685 பேர் இறந்தனர்.