கழுத்தை அறுத்து ஜவுளி வியாபாரி தற்கொலை முயற்சி-போலீசார் விசாரணை

கழுத்தை அறுத்து ஜவுளி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-10-31 22:29 GMT
சேலம்:
சேலம் குகை சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (வயது 48). ஜவுளி வியாபாரியான இவர், நேற்று அதிகாலையில் அவர் கழிப்பறைக்கு சென்றார். அங்கு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்தது செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்