அந்தியூர் சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
கொங்கு காளை மாடு
அந்தியூர் கால்நடைச் சந்தை வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் நடக்கும். அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு சேலம் மாவட்டம் மேட்டூர், பண்ணவாடி, கொளத்தூர், எடப்பாடி மற்றும் கர்நாடக மாநிலம் ராமாபுரம், மைசூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும், நாட்டுப் பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.65 ஆயிரத்திற்கும் விலை போனது.
எருமை மாடு
ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்திற்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசுமாடு ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், திருப்பூர் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலைபேசி பிடித்துச் சென்றனர்.