கடையம்:
கடையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 79). ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர் நேற்று கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாராயணன் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.