இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
நெல்லையில் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நெல்லை:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகம் முன்பு உள்ள இந்திரா காந்தியின் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில விவசாய அணி ஒருங்கிணைப்பாளர் வாகை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. திசையன்விளை பழைய பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தி உருவப்படத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் உள்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.