வியாபாரியிடம் பணம்-செல்போன் பறிப்பு

வியாபாரியிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது;

Update: 2021-10-31 19:57 GMT
கொள்ளிடம் டோல்கேட்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி திருச்சி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். நெ.1 டோல்கேட் அருகே கொள்ளிடம் பாலத்தில் வந்தபோது 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சத்தியமூர்த்தியை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே மர்ம நபர்கள் அவரை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு 2 செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்