கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் கைது

நெல்லை டவுனில் கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-31 19:35 GMT
நெல்லை:
நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர் கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்றதாக கோவில் நிர்வாகிகள் டவுன் குற்றப்பிாிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்