தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்:-;

Update: 2021-10-31 19:32 GMT
பெரம்பலூர்

கீழே விழும் நிலையில் உள்ள மின்மாற்றி 
பெரம்பலூர் - எளம்பலூர் சாலை கீரீன் சிட்டி அருகில் சாலையோரத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து வருகிறது. மின்சாரம் இருக்கும்போது இந்த  மின்கம்பங்கள் முறிந்து மின்மாற்றி கீழே விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரம்பலூர். 

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, நவம்பட்டி வல்லிகுலம்  கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் வசதி என எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மழை காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நவம்பட்டி, புதுக்கோட்டை. 

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் நெய்வேலி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் ஏற்றுவதற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இல்லாததால் குடிநீர் வசதி இல்லாமல் கலப்படமான நீரை அருந்தி வருகின்றனர். இப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சூர்யா, நெய்வேலி, திருச்சி.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அரையப்பட்டி வன்னியன் விடுதி  முத்தங்குளம்  சுடுகாடு  செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து, சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரையப்பட்டி, புதுக்கோட்டை. 

ஏரிக்கரை படிகட்டுகளை சரிசெய்ய கோரிக்கை 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தா. பழுர் ஒன்றியம், காடுவெட்டான்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் ஏரிக்கரையின் 3 படிக்கட்டுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வயதானவர்களும், பொதுமக்களும் குளிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரிக்கரையின் படிக்கட்டை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கே. எஸ். தங்கையன், காடுவெட்டாங்குறிச்சி, அரியலூர்.

எரியாத தெரு விளக்குகள்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் என்னும் கிராமத்தில்  தெரு விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் அப்பகுதியில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும்  இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் சாலையில் செல்வதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தா.பழூர், அரியலூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்புரெட்டிபட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியிலிருந்து பாப்பாத்தி அம்மன் கோவில் வரையுள்ள சாலையின் நெடுகிலும் குப்பைகளை கொட்டி போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழை பெய்யும்போது சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இந்த சாலைக்கு அடிப்படை வசதியான தெருவிளக்கு வசதி கிடையாது. மழைக்காலங்களில் விஷ ஜந்துக்களால் மக்கள் தினமும் பீதியுடன் உள்ளனர். பள்ளிகள் திறக்கும் சூழ்நிலையில் பள்ளியின் அருகே குப்பைகளை அகற்றாமல் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரத்தினகிரி, குப்புரெட்டிபட்டி, கரூர். 

சாலையில் தேங்கும் மழைநீர் 
புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் அண்ணாநகர், வாரிப்பட்டி சந்திப்பில் வடிகால் வசதி இன்றி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அண்ணாநகர், புதுக்கோட்டை. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, கரட்டாம்பட்டி கிராமம் கவுண்டர்தெரு அருகில் காமன் கோவில் உள்ளது.  இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைபெய்யும் போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சக்திநாதன்,  கரட்டாம்பட்டி, திருச்சி.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, வேங்கூர் கிராமம்  கலைஞர் காலனி பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வேங்கூர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், பேரூர் சங்கர் நகர் பகுதியில் தார்ச்சாலை வசதி இல்லாததால் மழை பெய்யும்போது மண் சாலையானது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்லும் முதியவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பேரூர், திருச்சி. 

நாய்கள் தொல்லை அதிகரிப்பு 
திருச்சி குண்டூர் பஸ்  நிலையம் தொடங்கி எம்.ஐ.இ.டி. பஸ் நிலையம் வரை நெடுஞ்சாலையில் நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேபோல் ஐடி பார்க் நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில், அதையடுத்துள்ள டாஸ்மாக் வரை நாய்கள், பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவை சாலையில் குறுக்கே திடீரென செல்வதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நெடுஞ்செழியன். ஜே.எம்.நகர்,  திருச்சி. 

வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகள் 
திருச்சி சத்யாநகர், குடமுருட்டி சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குடமுருட்டி, திருச்சி. 

பழுதடைந்த பாலம் 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கொடுந்துறை ஊராட்சி ஒன்றியம், பெரிய கொடுந்துறை-மணப்பாளையம் சாலையில் உள்ள பாலம் கடந்த  5 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொடுந்துறை, திருச்சி. 

மேலும் செய்திகள்