டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி,
தேளூர் பாப்பாத்தி அம்மன் கோவில் பின்புறம் டிராக்டரில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் தமிழரசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமியை (வயது 36) போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.