தீபாவளி பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க அதிகாரி வேண்டும்
தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க அதிகாரி வேண்டும்
திருப்பத்தூர்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, வாங்க மற்றும் பயன்படுத்த தடைவிதித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 4-ந்தேதி தீபாவளி பண்டிைக கொண்டாடப்படுவதை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பட்டாசுகளை அதாவது ரசாயனம் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, வாங்க மற்றும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வாங்குவதை தவிர்த்து பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போலி பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்வது விற்பனையாளர்களின் விவரம் கண்டறியப்பட்டால் அல்லது தெரியவந்தால் உற்பத்தியாளர்களின் உரிமங்கள் ரத்து செய்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் தெரிவித்துள்ளார்.