தீபாவளி பரிசுபொருட்கள் வழங்கும் விழா
தீபாவளி பரிசுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கேப்டன் சரவணன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் டாக்டர் ஆனந்த், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் நகர் செயலாளர் ஆனந்த், சூரக்குடி பழனியப்பன், இந்து முன்னணி அக்னிபாலா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.