அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேர் கைது

அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-31 17:22 GMT
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோழிமேக்கனூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38). இவரது நண்பர் பிரபு (38). இவர்கள் 2 பேரும் அங்குள்ள குடோனில்  அனுமதி இல்லாமல் பட்டாசு பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்  போலீசார் அரிசி குடோனில் சோதனை செய்தபோது 348 பெட்டி பட்டாசுகள் அனுமதியின்றி பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்