மின்கம்பங்களை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விளை நிலங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅள்ளி ஊராட்சி சத்யாநகர் கிராமத்தில் விவசாய விளை நிலங்களுக்கிடையே உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்கள் நடவேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதற்கு மேலும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.