ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்-3 வாலிபர்கள் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை அரூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-31 17:22 GMT
அரூர்:
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டம், அரூரில், நடேசா பெட்ரோல் பங்க் பிரிவு ரோடு அருகில், நேற்று மதியம், துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பையுடன் நடந்்து சென்ற 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். 
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், நூரணி கிராமம் பாரத் நகரை சேர்ந்த நவாஷ் (எ) சுடு (வயது 24), ஆண்டாளூர் கேட் பகுதியை சேர்ந்த முகமது அசாத் (20), கலப்புரம் முகமது யாசின் (20) என்பது தெரிந்தது.
3 வாலிபர்கள் கைது
இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்