ரிஷிவந்தியத்தில் விஷ வண்டு கடித்து மாணவன் சாவு

ரிஷிவந்தியத்தில் விஷ வண்டு கடித்து மாணவன் சாவு;

Update:2021-10-31 22:48 IST
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் வேடநத்தம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வளையாபதி மகன் மகாவிஷ்ணு(வயது 15). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.  மகாவிஷ்ணு நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற போது விஷவண்டு கடித்ததாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து அவைன சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மகாவிஷ்ணு பரிதாமாக இறந்துவிட்டான். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்